/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.டி., வேலை வாங்கி தருவதாக ரூ.15.65 லட்சம் மோசடி வழக்கு பதிய கோர்ட் உத்தரவு
/
ஐ.டி., வேலை வாங்கி தருவதாக ரூ.15.65 லட்சம் மோசடி வழக்கு பதிய கோர்ட் உத்தரவு
ஐ.டி., வேலை வாங்கி தருவதாக ரூ.15.65 லட்சம் மோசடி வழக்கு பதிய கோர்ட் உத்தரவு
ஐ.டி., வேலை வாங்கி தருவதாக ரூ.15.65 லட்சம் மோசடி வழக்கு பதிய கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 25, 2024 05:46 AM
புதுச்சேரி: புதுச்சேரி இளைஞரிடம், ஐ.டி.,யில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.15.65 லட்சம் மோசடி செய்தவர் மீது, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரெட்டியார் பாளையம், மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திர மவுலி, 26. அவர் கடந்த, 2022ல், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை குறித்து பயிற்சியில் இருந்தார்.
அந்த காலகட்டத்தில் அவருடன் விடுதியில் தங்கியிருந்த தீபக் வெங்கட் என்பவருடன் நட்பானார்.
அவரிடம் ஐ.டி., வேலை வாங்கித்தரும்படி, சந்திர மவுலி கோரினார். அதற்கு தீபக் வெங்கட், சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், அதில் சேர, பலருக்கு பணம் தர வேண்டும்' என்றார்.
அதை நம்பி, சந்திரமவுலி அவருக்கு பல தவணைகளில் 15.65 லட்சம் ரூபாய் அனுப்பினார். அவர் சந்திர மவுலிக்கு வேலை வாங்கி தரவில்லை. கடந்த ஜூன் மாதம், சந்திர மவுலி அவரை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் சந்திர மவுலியை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சந்திர மவுலி, புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடன டியாக ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில், சந்திரமவுலியின் புகாரை பெற்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

