நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : அரியாங்குப்பத்தில் சாலையோரம் சென்ற மாட்டின் மீது மோட்டார் பைக் மோதியதில், மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.
அரியாங்குப்பம் ஜெயபால் நகரைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி புவனேஸ்வரி 45. இவர் மாடுகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் கடலுார் - - புதுச்சேரி சாலை அரியாங்குப்பம் தனியார் மரவாடி எதிரே புவனேஸ்வரி மாடுகளை சாலை ஓரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வேகமாக வந்த பைக் சாலையோரம் சென்ற ஒரு மாட்டின் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்து கீழே விழுந்த மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.
பைக்கில் வந்த நபரும் கீழே விழுந்து காயமடைந்தார். இது குறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.