விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம்
விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 21, 2026 05:11 PM
திருக்கனுார்: திருக்கனுார் உழவர் உதவியகம் சார்பில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
முகாமில், வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் வரவேற்று, பயிர் காப்பீட்டின் பயன் மற்றும் முக்கியத்துவம், அதனை பதிவு செய்யும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
துணை வேளாண் அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். முகாமில், பஜாஜ் அலைன்ஸ் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டது. இதில், திருக்கனுார், கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, மணலிப்பட்டு, மண்ணாடிப்பட்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், செயல் விளக்க உதவியாளர் தங்கதுரை, ஊழியர்கள் விஜய் கிருஷ்ணா, வளர்மதி செய்திருந்தனர். ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
