ADDED : ஜூலை 21, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால், டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகாலாப்பட்டு அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்தவர் பன்னீர்செல்வம். டிரைவர். திருமணமாக இவருக்கு அதிக குடி பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு குடிபோதையில் சென்றார்.
இதனை அவர் தாயார் லதா கண்டித்தார். இதனால், அவர் கோபித்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் அவரது தாயார் பன்னீர்செல்வம் தங்கி இருந்த வீட்டில் வந்து பார்த்த போது, அவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
