ADDED : மார் 03, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டையில், தேக்குமரங்களை வெட்டி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேதராப்பட்டு தொழிற்பேட்டை, புதுச்சேரி அரசின் பிப்டிக் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள தேக்கு மர தோட்டத்தில், தேக்கு மரங்கள் வளர்க்கப்படுகிறது.
இந்த தோட்டத்தில் வளர்ந்திருந்த 5 தேக்கு மரங்களை, மர்ம நபர்கள் சிலர் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இந்த மரம் ஒவ்வொன்றும், ஒரு மீட்டர் சுற்றுளவு கொண்டதாகும்.
இதன் மதிப்பு ரூ. 2 லட்சமாகும். இதுகுறித்து, பிப்டிக் மேலாளர் சங்கரன் சேதாரப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, மரங்களை வெட்டி, திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.