/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மர்ம கும்பல் பணம் பறிப்பு பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
/
மர்ம கும்பல் பணம் பறிப்பு பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
மர்ம கும்பல் பணம் பறிப்பு பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
மர்ம கும்பல் பணம் பறிப்பு பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : ஆக 31, 2024 02:42 AM
புதுச்சேரி: மும்பை சைபர் போலீஸ் என பல்வேறு வகைகளில் மிரட்டி பணம் மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை செய்தியில் கூறியிருப்பவதாவது:
தனியார் கூரியர் மூலம் போதை, பொருள்கள், ஆயுதங்கள், சிம் கார்டுகள், அனுப்பபட்டுள்ளதாவும் மர்ம நபர்கள், பேசுகின்றனர்.
அந்த நபர்கள், மும்பை போலீஸ் அதிகாரி போலவும், சி.பி.ஐ., அதிகாரி, எனவும், சிலர் வீடியோகாலிலில் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
மர்ம நபர்கள் பேசும் போது வங்கியில் கடனை கட்டாமல் இருப்பதால், புகைப்படத்தை வெளியிடுவதாக, மிரட்டி வருகின்றனர்.
ஆன்லைன் கடன் ஆப் என்பது, 100 சதவீதம் பொய்யானது. வீடியோ காலில் பெண்கள் ஆபாசமாக நின்று பேசினால், நம்ம வேண்டாம்.
பகுதி நேர வேலை, பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறிவருகின்றனர்.
தொடர்ந்து, ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக் கலாம், என ஆசை வார்த்தை கூறி சிறிய தொகை, கொடுத்து, பெரிய தொகையை வாங்கி மோசடி செய்து வருகின்றனர்.
சமூக வளைதளங்களில் வரும் தேவையில்லாத லிங்கை கிளிக் செய்வதை தவிர்க்கவும்.
கிப்ட் பார்சல் வந்துள்ளதாக, அதற்கு கூடுதல் மற்றும் வரி பணம் கேட்டால் பணம் அனுப்புவதும், ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு, பின் நம்பர், ஓ.டி.பி., ஆகிய விபரங் களை கொடுக்க வேண்டாம்.
மேலும், https://cybercrime.gov. in இணைய தளத்திலும், புகார் தெரிவிக்கலாம். 1930 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள் ளனர்.