/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திடீர் திடீரென சுருண்டு விழுந்து இறக்கும் கறவை மாடுகள்; லாஸ்பேட்டையில் சோகம்

ADDED : செப் 10, 2024 06:51 AM

புதுச்சேரி: திருவண்டார்கோவிலை தொடர்ந்து லாஸ்பேட்டையில் வாயில் நுரை, ரத்தம் வெளியேறியபடி கறவைமாடு ஒன்று இறந்து கிடந்தது.
புதுச்சேரி திருவண்டார்கோவில் பெரியபேட்டில் மாயக்கிருஷ்ணன், இந்திராணி தம்பதியின் கறவை மாடுகள் கடந்த 6ம் தேதி மேச்சலுக்கு சென்று திரும்பியவுடன் அடுத்தடுத்து 5 கறவை மாடுகள் வாயில் நுரை, ரத்தம் வழிந்த நிலையில் துடிதுடித்து உயிரிழந்தது. கறவை மாடுகள் திடீர் இறப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில், லாஸ்பேட்டை அசோக் நகர், பாரதி வீதியில் நேற்று மதியம் 1:00 மணிக்கு, கறவைமாடு ஒன்று திடீரென சாலையோரம் வாயில் நுரை மற்றும் ரத்தம் வெளியேறிய நிலையில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இறந்த கறவை மாட்டை உரிமைகோர யாரும் முன் வராததால் மாலை வரை அதே இடத்தில் கறவை மாட்டின் உடல் கிடந்தது. இறந்த மாட்டின் அருகிலே பிளாஸ்டிக் பையில் பிரியாணி பொட்டலம் ஒன்றும் கிடந்தது.
புதுச்சேரியில் தொடர்ச்சியாக ஆங்காங்கே கறவை மாடுகள் வாயில் நுரை, ரத்தம் வழிந்த நிலையில் இறந்து வருவது கால்நடை வளர்ப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திடீர் திடீரென கறவை மாடுகள் இறப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து கால்நடைத்துறை வெளியிட வேண்டும்.