/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் மீதுள்ள இரும்பு கிரில் கம்பிகள் சேதம்; பெரியவர்கள், குழந்தைகள் விழுந்து காயம்

ADDED : ஏப் 24, 2024 08:48 AM

புதுச்சேரி : வாய்க்கால் மீது போடப்பட்ட இரும்பு கிரில் கம்பிகள் உடைந்து சேதமடைந்திருப்பதால் குழந்தைகள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி நகர பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்படுகிறது. மழைநீர் வடிய சாலையோர எல் வடிவ வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சாலைகள் குறுக்கிடும் பகுதியில் மட்டும் ப வடிவ வாய்க்கால் அமைக்கப்பட்டது. இதில் குப்பைகள் அடைத்து கொண்டு தண்ணீர் தேங்கியது. இதனால் ப வடிவ வாய்க்கால் மீது இரும்பு கம்பிகளால் கிரில் பலகை அமைக்கப்பட்டது.
சில இடங்களில் தரமற்ற கம்பிகள் பயன்படுத்தியதால், பல டன் லோடு ஏற்றி செல்லும் லாரிகள் கடக்கும்போது கிரில் பலகையாக போடப்பட்ட பகுதியில் இரும்பு கம்பிகள் உள்பக்கமாக உடைந்து விடுகிறது.
இதனால் உடைந்த கிரில்களின் இடைவெளியில் நடந்து செல்வோர் கால்கள் நுழையும் அளவுக்கு அகலம் உள்ளது.
நேரு வீதி, காந்தி வீதி சந்திப்பு பனியன் கம்பெனி எதிரில் இரும்பு கிரில்களில் பல கம்பிகள் உடைந்து விட்டது.
சன்டே மார்க்கெட்டிற்கு குழந்தைகளுடன் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கிரில் மீது நடந்து செல்லும்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கால் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, புதுச்சேரி நகர பகுதி முழுதும் உள்ள இதுபோன்ற கிரில்களில் உடைந்து கிடக்கும் கம்பிகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.