/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார் மீது ஏறி நடனம்: கண்ணாடி உடைப்பு
/
கார் மீது ஏறி நடனம்: கண்ணாடி உடைப்பு
ADDED : ஏப் 28, 2024 03:45 AM
புதுச்சேரி : இறுதி ஊர்வலத்தில் கார் மீது ஏறி, நடனமாடி கண்ணாடியை உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பெரியார் நகரில் கடந்த 24ம் தேதி ருத்ரேஷ் என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவரது இறுதி ஊர்வலம் மறுநாள் 25ம் தேதி மாலை நடந்தது. அந்த ஊர்வலத்தின் முன் பலர் பேண்டு வாத்தியங்களுடன் நடனமாடி சென்றனர்.
பெரியார் நகர் பள்ளி வாசல் வழியாக சென்றபோது, கோவிந்தசாலையை சேர்ந்த தங்கம் என்பவர், சாலையோரம் நிறுத்தியிருந்த சுதா என்பவருக்கு சொந்தமான இண்டிகா மான்சா கார் மீது ஏறி நடனமாடினார். அதனை சுதாவின் மகன் சூர்யா தட்டி கேட்டார்.
ஆனால் தங்கம் நடனமாடி விட்டு சென்று விட்டார். ஊர்வலம் முடிந்து பார்த்தபோது, காரின் மேற்பகுதி சேதமடைந்ததுடன், கண்ணாடி உடைந்து கிடந்தது. இது தொடர்பாக சுதா உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் தங்கம் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

