ADDED : ஏப் 09, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார் ஒதியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, தனியார் சோப்பு கம்பெனி ஊழியர். இவரது மகள் சந்திரலேகா 17, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி கிருஷ்ணவேணி வழக்கம் போல் காலை வேலைக்கு சென்று விட்டார். பின் மாலை வீட்டிற்கு வந்தபோது மகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

