/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருமகள் புகார் மாமியார் மீது வழக்கு
/
மருமகள் புகார் மாமியார் மீது வழக்கு
ADDED : ஆக 02, 2024 01:15 AM
புதுச்சேரி: மருமகளை கொடுமை செய்த மாமியார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் பிரவீணா,27; இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மேரி கிறிஸ்டி சகாய அருண் இவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அவரது கணவர் வேலை தொடர்பாக, பிரான்ஸ் சென்று விட்டார்.
இந்நிலையில், பிரவீணா மாமியார் மேரிஸ் டெல்லாவுடன், வசித்து வந்தார். பிரவீணா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது மாமியார் அவரை துன்புறுத்தி, அவதுாறாக பேசி மிரட்டல் விடுத்தார்.
பிரவீணா புகாரின் பேரில் பி.சி.ஆர்., போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.