/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் மீது கார் மோதல் தவில் கலைஞர் பலி
/
பைக் மீது கார் மோதல் தவில் கலைஞர் பலி
ADDED : செப் 16, 2024 05:18 AM
பாகூர் : கன்னியகோவில் பகுதியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தவில் கலைஞர் இறந்தார்.
கன்னியகோயில் அடுத்த உச்சிமேடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 55; தவில் வித்வான். கிருமாம் பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டில் உள்ள ஒரு புதுமனை புகுவிழாவிற்கு நேற்று முத்துகிருஷ்ணன், கணபதி ஆகியோர் பைக்கிலும், அவரது மகன் சுபவிஜயேந்திரன் 28, வானுாரைச் சேர்ந்த செங்கேணி 60; ஆகியோர் மற்றொரு பைக்கிலும் சென்றனர்.
நேற்று அதிகாலை 3:30 மணி அளவில், கிருமாம்பாக்கம் சாலை சந்திப்பில் சுப விஜயேந்திரன் ஓட்டி சென்ற பைக் மீது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற ஸ்கோடா கார் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். உடன் வந்தவர்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் செங்கேணி, 60; இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த சுபவிஜயேந்திரன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போக்குவரத்து போலீசார் கார் டிரைவர் திருப்பூரைச் சேர்ந்த தரணிதரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

