சமுதாய கல்லுாரியில் விண்ணப்பிக்க 27ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
சமுதாய கல்லுாரியில் விண்ணப்பிக்க 27ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
ADDED : ஜூலை 24, 2026 05:41 PM
புதுச்சேரி: சமுதாய கல்லுாரியில், விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் இந்த கல்வியாண்டுக்கான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி மாலை வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, சமுதாய கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள் https://pucc.edu.in/Loginctrl/Announcement என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பாடவாரியான இடங்களையும், கல்லுாரிக்கு செலுத்த வேண்டிய கட்டண விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
கல்லுாரியில், இளங்கலை பட்டப்படிப்பில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. கணிப்பொறி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, இளங்கலை தொழில்கல்வி பிரிவுகளான ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, ரீனல் டயாலிசிஸ், ஆப்டோமெட்ரி, கார்டியாலேஜி, ரேடியோகிராபி போன்ற கல்வி வேலை வாய்ப்பினை அளிக்க கூடியது.
சமுதாயக் கல்லுாயில் உள்ள சுகாதார ஆய்வாளர் பட்டயப்படிப்பு எனும் கல்வி பயின்றோர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலருக்கு அரசு வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் பி.ஏ., புரபஷனல் இங்கிலீஷ் பட்டக்கல்வியும் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படித்தவுடன் அரசு வேலை வாய்ப்பை பெற உதவிடும் பட்ட, பட்டயச் சான்றிதழ் கல்வி நல்ல வாய்ப்பு.
மேலும் விவரங்களுக்கு கல்லுாரி முதல்வரின் தொலைபேசி எண் 0413-2255806, மற்றும் principal.pucc@pondiuni.ac.in என்ற இணைய முகவரியை தொடர்பு கொள்ளவும். இத்தகவலை கல்லுாரி முதல்வர் அருணா தெரிவித்துள்ளார்.
