/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்
/
துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்
ADDED : ஆக 02, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நீட் அல்லாத படிப்புகளுக்கு வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே சென்டாக் முதற்கட்ட கவுன்சில் நடத்தி பல மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்து, துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் மதிப்பெண் அல்லாத கலை மற்றும் அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.