/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., தலைவர் நட்டா 'ரோடு ேஷா' எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு
/
பா.ஜ., தலைவர் நட்டா 'ரோடு ேஷா' எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு
பா.ஜ., தலைவர் நட்டா 'ரோடு ேஷா' எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு
பா.ஜ., தலைவர் நட்டா 'ரோடு ேஷா' எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு
ADDED : ஏப் 14, 2024 05:13 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ., தலைவர் நட்டா பங்கேற்கும் ரோடு ேஷா பாதுகாப்பு குறித்து எஸ்.பி., தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய பா.ஜ., தேசிய தலைவர் நட்டா நாளை 15ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
அண்ணா சாலையில் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் துவங்கி எஸ்.வி., பட்டேல் சாலை அதிதி ஓட்டல் வரை நட்டா பங்கேற்கும் ரோடு ேஷா நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு துவங்கி 9:00 மணிக்குள் ரோடு ேஷா நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா நேற்று ஆய்வு நடத்தினார். அண்ணா சாலை முதல் அதிதி ஓட்டல் வரை உள்ள சாலையோர கட்டங்கள் மீது கண்காணிப்பு பணியில் ஈடுப்படும் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜெய்சங்கர் கலந்து கொண்டனர்.