/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர்நிலைகளை துார்வார கூடுதல் நிதி முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் கோரிக்கை

ADDED : மார் 10, 2025 06:16 AM
காரைக்கால்: காரைக்காலில் நீர்நிலைகளை துார் வார கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, முதல்வருக்கு டெல்டா விவாயிகள் நலசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க தலைவர் ராஜேந்திரன் விடுத்துள்ள கோரிக்கை;
புதுச்சேரி மாநில சட்டசபை கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் செலவினங்களை கருத்தில் கொண்டு சாகுபடிக்கு பிந்தைய மானிய தொகையை ஏக்கருக்கு நெல், பருத்தி, கரும்பு, உளுந்து, பயறு, வாழை மற்றும் தோட்ட பயிர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
புதுச்சேரி அரசே, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய ஆவண செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு மானியத்துடன் மினி டிராக்டர், அறுவடை மிஷின் ஆயில் இன்ஜின் வழங்க வேண்டும். குளம், வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளை கோடை காலத்தில் துார் வாரிட முதல்வர் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.