/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தல் செலவை ரூ.95 லட்சமாக உயர்த்த கோரிக்கை
/
லோக்சபா தேர்தல் செலவை ரூ.95 லட்சமாக உயர்த்த கோரிக்கை
லோக்சபா தேர்தல் செலவை ரூ.95 லட்சமாக உயர்த்த கோரிக்கை
லோக்சபா தேர்தல் செலவை ரூ.95 லட்சமாக உயர்த்த கோரிக்கை
ADDED : மார் 23, 2024 06:21 AM
புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தல் செலவினை 95 லட்சமாக உயர்த்த வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தேர்தல் துறையிடம் மனு அளித்துள்ளார்.
அவர், தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்து அளித்த மனு விபரம்;
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் செலவு 75 லட்சம் ரூபாயில் இருந்து 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி லோக்சபா தொகுதியின் தேர்தல் செலவு தமிழகம் போன்று உயர்த்தப்படாமல் 75 லட்சமாகவே உள்ளது. புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காரைக்கால், மாகி, ஏனாம், புதுச்சேரி என நீண்ட நெடுந்தொலைவு கொண்ட பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.
புதுச்சேரியை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்ய கூடுதல் செலவு ஆகும். எனவே தற்போது தமிழக லோக்சபா தொகுதிகளில் உயர்த்தி அறிவித்துள்ளது போன்று புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

