/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேல்ராம்பட்டு சாலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
/
வேல்ராம்பட்டு சாலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
வேல்ராம்பட்டு சாலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
வேல்ராம்பட்டு சாலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
ADDED : மே 15, 2024 07:24 AM

புதுச்சேரி : வேல்ராம்பட்டு சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
மரப்பாலம் சிக்னலில் இருந்து வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு செல்லும் சாலையில் தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் ஏராளமான குடியிருப்பு நகர்கள் உள்ளது. கொம்பாக்கம் கிராமத்திற்கு செல்லவும் பெரும்பாலான மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மரப்பாலம் துவங்கி வேல்ராம்பட்டு ஏரிக்கரை வரை சாலையை ஆக்கிரமித்து ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தது.
இதனால் சாலையின் அகலம் குறைந்து ஒத்தையடி பாதையாக மாறியது. சாலையை விரிவாக்கம் செய்ய பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இச்சாலையில் உள்ள குடிசை வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் முயற்சியால், சாலையில் இருந்த 27 குடிசை வீடுகளில் வசித்தவர்களுக்கு, வீராம்பட்டினத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மரப்பாலம் முதல் வேல்ராம்பட்டு ஏரிக்கரை வரை உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இப்பணி நேற்று 2வது நாளாக நடந்தது.
பொதுப்பணித்துறையினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர். முழுதுமாக ஆக்கிரமிப்பு அகற்றிய பின்பு வாய்க்காலுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.

