நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தபால் நிலையங்கள் இணைப்பை (ஐ.டி.சி.) கண்டித்து, தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உதவி மாநில செயலாளர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். தமிழ் மாநில செயலாளர் (அஞ்சல்-4) சுகுமாறன் முன்னிலை வகித்தார். இதில் தேசிய அஞ்ச ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், கருணாகரன், சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

