sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 


ADDED : ஆக 14, 2024 05:59 AM

Google News

ADDED : ஆக 14, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சட்டசபை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சம்மேளனம் தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் சதீஷ், விமலாதேவி, கிரி, வெற்றிவேல், மஞ்சுமாதா முன்னிலை வகித்தனர்.

சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜவஹர், செவிலிய அதிகாரிகள் சங்கம் சுனீலா குமாரி, ஹரிதாஸ், சுகாதார ஆய்வாளர் சங்கம் திருமலை, ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைபடி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், நர்சிங் அலவன்ஸ் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான வாரிசுதாரர் பணி நியமனத்தை, அனைத்து வாரிசுதாரர்களுக்கும் ஒரு முறை தளர்வு அளித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆஷா ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us