/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு செயல்விளக்க நிகழ்ச்சி
/
விவசாயிகளுக்கு செயல்விளக்க நிகழ்ச்சி
ADDED : ஜூலை 03, 2024 05:54 AM

வில்லியனுார் : திருக்காஞ்சி கிராமத்தில் நுண் கீரை சாகுபடி செய்வது குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் கீழ், திருக்காஞ்சி கிராமத்தில் நுண்கீரை சாகுபடி செய்வது குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு வேளாண் துறை வில்லியனுார் கோட்டம் இணை வேளாண் இயக்குனர் அமர்ஜோதி தலைமை தாங்கினார்.
வில்லியனுார் உழவர் உதவியக வேளாண் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். திருக்காஞ்சி உழவர் உதவியக வேளாண் அலுவலர் தினகரன் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் வில்லியனுார் வேளாண் ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நுண்கீரை சாகுபடி செய்வது குறித்து செயல் விளக்கம் அளித்தார். மேலும் நுண் கீரையினால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் பேசினார்.
முகாமில் மங்கலம் மற்றும் திருக்காஞ்சி பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மகளிர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உழவர் உதவியக வேளாண் உதவியாளர்கள் ஜெகதீசன், சேகர், கருணாகரன், அன்பழகன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் செய்தனர்.