/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி ஆர்ப்பாட்டம்
/
உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 18, 2024 04:18 AM
அரியாங்குப்பம் : உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இணை செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் விமலா வரவேற்றார். தலைவர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
மாநில துணை செயலாளர் கலியபெருமாள், உதவி செயலாளர் இதயவேந்தன், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். வெங்கட்ராமன், பொது செயலாளர் ராஜன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன், தனஞ்செயன் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரியில், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். குறைந்த பட்ச 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
நேரடி நியமனங்களுக்கான வயது வரம்பை 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். காரைக்காலை பின்தங்கிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.