ADDED : ஜூன் 07, 2026 07:01 PM
வில்லியனுார்: மங்கலம் கிராம விவசாயிகளுக்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த பூச்சி மேலாண்மை குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வில்லியனுார் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், நடந்த முகாமை உழவர் உதவிய வேளாண் அலுவலர் தினேஷ்குமார் துவக்கி வைத்து விவசாய பயிர்களில் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சூரிய விளக்கு பொறி கருவிகள் வழங்கப்பட்டது. இந்த கருவிகள் மூலம் பயிர்களை அழிக்கும் தேவையற்ற பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். விவசாய நிலத்தில் அமைத்துள்ள கருவியால் அடுத்தடுத்துள்ள விவசாயிகளும் பயன்பெறுவார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ், விரிவாக்க பணியாளர் ஜெகதீசன் ஆகியோர் செய்திருந்தனர்.
