ADDED : மே 25, 2024 03:53 AM

புதுச்சேரி: கோரிமேடு பகுதியில் வீடு வீடாக டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுபிரசுரம்வினியோகிக்கப்பட்டது.
புதுச்சேரி நலவழித்துறை, தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உழவர்கரை நகராட்சி சார்பில் கோரிமேடு பகுதிக்குட்பட்ட குருநகரில், வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
வீட்டின் உரிமையாளர்களை சந்தித்து டெங்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.
காலி மனைகளில் தேவையற்ற பொருட்களையும் குப்பைகளையும் போட வேண்டாம் என்றும், குப்பைகளை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், தேவையற்ற பொருட்களில் மழை நீர் தேங்கி, டெங்கு, சிக்கன் குனியா பரப்பும் ஏ.டி.ஸ்., வகை கொசு உற்பத்தி அதிகரிக்கும் என்றும், பிரிட்ஜ் பின்புறம் பிளாஸ்டிக் ட்ரே,பாட்டிலில் வளர்க்கப்படும் மணி பிளான்ட் ஆகியவற்றை கண்காணித்து கொசு உற்பத்தியை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுகாதார ஆய்வாளர், நகராட்சி ஆய்வாளர், சுகாதார உதவியாளர்கள்,உழவர்கரை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

