/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை

ADDED : மே 11, 2024 04:39 AM

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 3 பேர், 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் நான்காம் இடத்தை பிடித்துள்ளனர்.
மாணவிகள் தர்ஷினி, மிருதுளா, நிகிர்தா ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளனர். மாணவர்கள் அப்ரா, ஜோஸ்னா சோனல், நந்த கிஷோர் ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 5ம் இடத்தை பிடித்துள்ளனர்.
மாணவர்கள் ரித்திகாஸ்ரீ 494, சுமித்ரா 493, தர்ஷன், கமலேஷ், ஹாசினி, பிரிய தர்ஷினி, சிவ சஞ்சய், யோகஸ்ரீ ஆகியோர் 492 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேவதர்ஷினி, தர்ஷன், கவியரசன், நிவேதினி, சுஜித், சுப்ரியா, தரணி ஆகியோர் 491 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக ஆங்கிலம் -8; கணிதம்-39; அறிவியல்-6; சமூக அறிவியல்-19 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனையாளர்களை தாகூர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேல், செயலாளர் பரமசிவம், பொருளாளர் காளியண்ணன், நிர்வாகிகள் அருண்குமார், காளியப்பன், ராஜூ, சிலம்பரசன், கல்வி குழு ஆலோசகர் பழனிவேல், இயக்குனர்கள், பள்ளி முதல்வர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்தினர்.
தாகூர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் தொடர்ந்து மாநில அளவில் சாதனை படைத்து வருகிறது.