/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி.ஜி.பி., அதிரடி உத்தரவு வாகனங்களுக்கு விடிவுகாலம்
/
டி.ஜி.பி., அதிரடி உத்தரவு வாகனங்களுக்கு விடிவுகாலம்
டி.ஜி.பி., அதிரடி உத்தரவு வாகனங்களுக்கு விடிவுகாலம்
டி.ஜி.பி., அதிரடி உத்தரவு வாகனங்களுக்கு விடிவுகாலம்
ADDED : மே 19, 2024 03:17 AM
போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கி வீணாகும் வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். விபத்து, கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதுபோல நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை, நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து அபராதத் தொகையை செலுத்தி சிலர் மட்டுமே மீண்டும் பெறுகின்றனர்.
ஆனால், பலர் தங்களது வாகனங்களை திரும்ப பெறுவதற்கான முயற்சியைகூட செய்வதில்லை. இதன் காரணமாக, போலீஸ் ஸ்டேஷன்களில் வாகனங்கள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. வாகனங்கள் மீதான வழக்கு முடிவடைவதற்குள் துருப்பிடித்து, அனைத்து உதிரிபாகங்களும் பாழாகி, எவ்விதத்திலும் பயன்படுத்த முடியாததாக மாறி விடுகிறது. மேலும், போலீஸ் ஸ்டேஷன்களில் நிற்கும் வாகனங்களை அவ்வப்போது ஏலம் விட்டாலும், வாகன குவியல் குறைவதாக தெரியவில்லை.
இதுகுறித்து டி.ஜி.பி.,யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கி வீணாகும் வாகனங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
மக்கும் வாகனங்களை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; நானே நேரில் வந்து ஆய்வு செய்வேன் என டி.ஜி.பி., எச்சரித்துள்ளதால், காயலான் கடைபோல் கட்சியளிக்கும் போலீஸ் ஸ்டேஷன்கள் விரைவில் புது பொலிவு பெற உள்ளது.

