நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
தொடர்ந்து, கடந்த 13ம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவமும் நடந்தது.
திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.