/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED : ஏப் 27, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. 25ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
நேற்று முன்தினம் தினம் பூங்கரகம் எடுத்து வரப்பட்டது. நேற்று மாலை 6:30 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

