/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
ADDED : ஜூன் 23, 2024 05:08 AM
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.
தீமிதி உற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.
கடந்த 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது.
இதில் காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று இரவு 8:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
இன்று காலை 7:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், சுவாமி வீதியுலா நடக்கிறது.