ADDED : மே 10, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: பி.எஸ்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 13ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 17ம் தேதி தீமிதி உற்சவமும் நடக்கிறது.