/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நீக்க ஊழியர்கள் மறியல் போராட்டம்
/
பணி நீக்க ஊழியர்கள் மறியல் போராட்டம்
ADDED : மார் 07, 2025 04:59 AM

புதுச்சேரி : பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள், மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இதையடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் பணி வழங்க கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், அரசு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தி ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் 100க்கும் ஊழியர்கள் பங்கேற்று அண்ணா சிலை அருகே துவங்கி கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர். அவர்களை பெரியக்கடை போலீசார் ராஜா தியேட்டர் சிக்னல் அருகே தடுத்து நிறுத்தியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
பின், ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து, அழைத்து சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.