/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டுக்குப்பம் பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கல்
/
காட்டுக்குப்பம் பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கல்
ADDED : ஆக 19, 2024 11:29 PM

பாகூர்: காட்டுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
விழாவில், பள்ளி ஆசிரியர் கவிதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் வானதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, கலாம் மக்கள் சாசன பாதுகாப்பு இயக்க தலைவர் சாண்டில்யன், டாக்டர்கள் மணிமேகலை, ஜோகன் பாண்டியன் பங்கேற்று, பள்ளி மாணவர்களுக்கு டைரி, அடையாள அட்டை வழங்கினர். முன்னதாக, 78 வது சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியை தேவி தொகுப்புரையாற்றினார்.
ஆசிரியர் நித்தியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜானகி, செந்தமிழ்செல்வி மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.