/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஆக 24, 2024 06:14 AM

வில்லியனுார்: சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி யில் மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் எதிர்க்கட்சி தலைவர் சிவாவழங்கினார்.
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட தகவல்களை எளிதில் புரியும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்படுகிறது.
சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர்-பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி பொறுப்பு விரிவுரையாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். எதிர்க்கட்சி தலைவர் சிவா மாணவ, மாணவியருக்கு 'தினமலர் - பட்டம்' இதழ்களை வழங்கி பேசுகையில், 'தினமலர்-பட்டம்' இதழ் தொடர்ந்து படித்து வந்தால் அரசு போட்டி தேர்வு மற்றும் பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வுகளில் சுலபமாக தேர்ச்சி பெறலாம்.
இதனால் பள்ளிக்கு 'தினமலர் - பட்டம்' இதழை மாணவர்களுக்கு எனது செலவில் இலவசமாக வழங்கி வருகிறேன். புதுச்சேரியில்தனியார் பள்ளி மாணவர்களை போன்று இந்த பள்ளி மாணவர்களும் நீட், ஐ.ஐ.டி., உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று எதிர்காலத்தில் நல்ல பதவிகளுக்கு வரவேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அனிதா ஜெனிபர், ஆனந்தராஜ், ராஜசேகர், சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.