/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆர் லதா ஸ்டீல் எதிரே சாலையின் குறுக்கே பள்ளம்
/
இ.சி.ஆர் லதா ஸ்டீல் எதிரே சாலையின் குறுக்கே பள்ளம்
இ.சி.ஆர் லதா ஸ்டீல் எதிரே சாலையின் குறுக்கே பள்ளம்
இ.சி.ஆர் லதா ஸ்டீல் எதிரே சாலையின் குறுக்கே பள்ளம்
ADDED : மே 20, 2024 04:49 AM

புதுச்சேரி : இ.சி.ஆரில் லதா ஸ்டீல் ஹவுஸ் எதிரே சாலையில் குறுக்கே உருவான பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
புதுச்சேரி இ.சி.ஆர்., லதா ஸ்டீல் ஹவுஸ் அருகே சாலையின் குறுக்கே மின்சார கேபிள் அமைப்பதிற்காக பள்ளம் தோண்டி கேபிள் அமைத்து பின்பு மூடினர். சரியான உயரத்திற்கு மண் கொட்டி, தார் கலவையால் மூடாமல் மண் கொட்டி வைத்துள்ளனர்.
இதனால் சாலையின் குறுக்கே பள்ளம் உருவாகி உள்ளது. இ.சி.ஆரில் வரும் வாகனங்கள் திடீரென பள்ளத்தில் இறங்கி ஏறும்போது, பைக், கார்களில் பயணிப்போர் நிலை குலைந்து விடுகின்றனர். சில நேரம் இரு சக்கர வாகன ஓட்டிகள், கிழே விழுந்து காயமடைகின்றனர்.
வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வரும் சாலை பள்ளத்தை மூடி சரிசெய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.