
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள் பிரிவு உபசார விழா நடந்தது.
உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள் விருப்ப ஓய்வு பெற்றார். அவருக்கு புதுச்சேரி போக்குவரத்து துறை கருத்தரங்க கூடத்தில், பிரிவு உபசார விழா நடந்தது.
விழாவுக்கு தலைமை தாங்கி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வாழ்த்தி பேசினார்.
விழாவில், துணை போக்குவரத்து ஆணையர் குமரன், வட்டார போக்குவரத்து தலைமை அதிகாரி சீத்தாராம ராஜ், துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக, கலியபெருமாள் ஏற்புரை நிகழ்த்தினார். புதுச்சேரி வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன் நன்றி கூறினார்.