/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி.ஜி.பி.,க்கு பிரிவு உபசார அணிவகுப்பு மரியாதை
/
டி.ஜி.பி.,க்கு பிரிவு உபசார அணிவகுப்பு மரியாதை
ADDED : ஆக 01, 2024 06:31 AM

புதுச்சேரி: பணி ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ்சுக்கு, புதுச்சேரி போலீசார் சார்பில் பிரிவு உபசார அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு புதுச்சேரி போலீஸ் சார்பில் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் பிரிவு உபசார அணிவகுப்பு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தலைமை தாங்கினார்.
எஸ்.பி., ரட்சனாசிங் தலைமையிலான 3 கம்பெனி போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். போலீஸ் சார்பில் நினைவு பரிசு வழங்கி சக போலீசார் பாராட்டினர். நிகழ்ச்சியில் ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார், சீனியர் எஸ்.பி.,க்கள், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்புரையாற்றி டி.ஜி.பி., ஸ்ரீநிவாசை சக போலீசார் இருக்கையுடன் தோளில் துாக்கி கொண்டு காருக்கு அழைத்து வந்தனர். டி.ஜி.பி.,யின் காரை கயிறு கட்டி போலீஸ் அதிகாரிகள் மைதானத்தில் வாசல் வரை இழுத்து வந்து வழியனுப்பு வைத்தனர்.