தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரிவு உபசார விழா 

பிரிவு உபசார விழா 

பிரிவு உபசார விழா 


ADDED : ஜூலை 31, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டிசி படம்: புதுச்சேரி: பல்வேறு அரசு துறைகளில், 39 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிர்வாக சீர்த்திருத்துறை சார்பு செயலர் அளகேசனுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. 

புதுச்சேரி நிர்வாக சீர்திருத்துறை சார்பு செயலாளராகவும் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணைச் செயலாளராகவும் அளகேசன் பணியாற்றி வந்தார். பல்வேறு அரசு துறைகளில் 39 ஆண்டுகள் பணிபுரிந்த இவர் நேற்று பணி ஒய்வு பெற்றதையொட்டி, பிரிவு உபசார விழா தலைமைச் செயலகத்தில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக அரசு செயலர் பங்கஜ்குமார் ஜா பங்கேற்று, பணி ஓய்வு பெற்ற சார்பு செயலர் அளகேசனுக்கு சால்வை அணிவித்த நினைவு பரிசு வழங்கி, வாழ்த்தினார்.

விழாவில், சார்பு செயலர்கள் ஜெய்சங்கர், ஹீரன், சிவராஜன், ஓய்வு பெற்ற குடிமை பணி அதிகாரிகள் குபேர சிவக்குமார், சாவித்திரி, ஓய்வு பெற்ற முதுநிலை கணக்கு அதிகாரிகள் குமாரவேலு, மல்லிகா, தலைமைச் செயலக பல்வேறு பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் ஓய்வு பெற்ற அளகேசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us