/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெப்பவாதம் குறித்து தி.மு.க., விழிப்புணர்வு
/
வெப்பவாதம் குறித்து தி.மு.க., விழிப்புணர்வு
ADDED : மே 12, 2024 04:48 AM
புதுச்சேரி தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் நித்திஷ், வெப்பவாதம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
எம்.எஸ்., முடித்துவிட்டு டாக்டராக உள்ள நித்திஷ், 'வெப்பவாதம், கடும் கோடையில் நினைவில் கொள்ள வேண்டியது, நிழலிடம், தண்ணீர், ஓய்வு' என்ற தலைப்பில் செய்ய வேண்டியவை, முதலுதவி பற்றி குறிப்பிட்டு பேனர் வைத்துள்ளார்.
தண்ணீர் அதிகமாக குடிப்பதுடன், லேசான, வெளிர் நிற ஆடை, குடை, தொப்பி, கண்ணாடி, காலணிகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இளநீர், லஸ்ஸி, பழச்சாறு, மோர் ஆகியவற்றை பருகவும். குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கவும். வெப்பம் அதிகமான நேரத்தில் டீ, காபி, சோடா போன்றவற்றை தவிர்க்கும்படியும் கூறப்பட்டுள்ளது.
வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, முதலுதவியாக உடல் வெப்பத்தை குறைக்க மின்விசிறி பயன்படுத்தவும். கீழே படுக்க வைத்து, நீர் ஆகாரம் கொடுக்கவும். குளிர்ந்த ஆடையால் போர்த்தவும்,
காலை மேலே தூக்கி வைக்கவும். தேவைப்பட்டால் அவசர சிகிச்சையை நாடவும் என குறிப்பிட்டுள்ளார்.