/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., வேட்பாளரை ஆதரித்து தி.மு.க., பிரசார கூட்டம்
/
காங்., வேட்பாளரை ஆதரித்து தி.மு.க., பிரசார கூட்டம்
காங்., வேட்பாளரை ஆதரித்து தி.மு.க., பிரசார கூட்டம்
காங்., வேட்பாளரை ஆதரித்து தி.மு.க., பிரசார கூட்டம்
ADDED : ஏப் 08, 2024 05:35 AM

புதுச்சேரி: புதுச்சேரிகாங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தி.மு.க., சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
கடலுார் சாலை, சிங்காரவேலர் திடலில்நடந்த கூட்டத்தில்,தி.மு.க., புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா வரவேற்றார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.வேட்பாளர் வைத்திலிங்கம், தி.மு.க., அவைத்தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ., விஸ்வநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, மா.கம்யூ., பிரதேச செயலாளர் ராஜாங்கம், வி.சி., மற்றும் ம.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.