ADDED : ஜூன் 10, 2026 06:52 PM
புதுச்சேரி: காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., பாலனுக்கு தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி கண்டனம் தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., பாலன், தேர்தல் தோல்விக்கு தி.மு.க.,வும், அதன் அமைப்பாளர் சிவா தான் காரணம் என்று வசைமாறி பொழிந்திருக்கிறார். இது யாரையோ திருப்திப்படுத்த வேண்டுமென்றோ, காலியாகும் காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க வேண்டுமென்றோ நடத்தப்படும் அவதுாறு பரப்புரை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
காங்கிரஸ் நின்ற 16 இடங்கள் தவிர்த்து தி.மு.க., நின்ற 5 இடங்களிலும் நட்பு போட்டி என்ற அக்கப்போர் திட்டத்தை வைத்து வேட்டு வைத்தனர். பாலனின் உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில், வி.சி.க.,வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி குழிபறித்தனர். இவர்களின் இந்த இரட்டைவேட அரசியல் இங்குமட்டுமல்ல பல மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல கட்சி தலைவர்கள் காங்கிரசை தோலுரித்து உள்ளனர். கடந்த 10 ஆண்டு காலமாக காணாமல்போன, பாலன் தன் வரவைக் காட்டிக்கொள்ள தி.மு.க.,வை பொதுமேடையில் விவாதிக்க அழைப்பது வேடிக்கையாக உள்ளது.
அந்த அளவிற்கு முதுகில் குத்தும் துரோகிகளோடு விவாதித்து தரம் தாழ்த்திக்கொள்ள தி.மு.க., தயாராக இல்லை. தனக்கு ஆரம்ப அரசியல் அடிச்சுவடியைக் கொடுத்து தன்னை வளர்த்தெடுத்த தி.மு.க., மீது திடீர் பாய்ச்சல் வேண்டாம் என, தி.மு.க., சார்பில் எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
