சிங்காரவேலர் அரசுப் பள்ளியில் ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கல்
சிங்காரவேலர் அரசுப் பள்ளியில் ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கல்
ADDED : ஜூன் 10, 2026 07:11 PM
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழை தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் மாணவர்களுக்கு வழங்கினார்.
பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை வெளியிடப்பட்டு வருகிறது.
வீராம்பட்டினம் சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கி, இந்த கல்வியாண்டு முழுதும் பட்டம் இதழை மாணவர்களுக்கு வழங்கி துவக்கி வைத்து பேசுகையில்,
‘பாட புத்தத்தை படிப்பதால் மாணவர்களுக்கு கல்வி அறிவு வளர்கிறது. ஆனால், தினமலரின் பட்டம் இதழை படிக்கும் போது, உலக அறிவு வளர்கிறது. தற்போது, மாணவர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.
உலகில் நடக்கும் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பத்திரிக்கை செய்திகளை தினமும் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். மொபைல் மற்றும் டி.வி., உங்களை அடிமையாக்கி உள்ளது. அதில் இருந்து மாணவர்கள் வெளியில் வரவேண்டும்.
தினமலர் நாளிதழில் பட்டம் இதழை நீங்கள் தினமும் படித்து, பட்டம் போல அறிவையும் உயர்த்தி கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
