சத்துணவு முட்டை விற்பனையா? வலைதளங்களில் வீடியோ வைரல்
சத்துணவு முட்டை விற்பனையா? வலைதளங்களில் வீடியோ வைரல்
ADDED : ஜூன் 10, 2026 07:11 PM

அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே சத்துணவு முட்டை விற்கப்படுவதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குள்ளஞ்சாவடி அருகே கோ.சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் முறைகேடாக எடுத்து சென்று வெளியில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சம்மந்தப்பட்ட பள்ளி ஊழியரிடம் சத்துணவு முட்டை வழங்குவதில் முறைகேடு நடப்பது குறித்து நபர் ஒருவர் கேள்வி எழுப்ப, வீடியோவில் வரும் இரண்டு நபர்கள், முட்டைகளை எடை போட எடுத்து செல்வதாக பதில் அளிக்கின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோக, பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
