/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க.,வினர் தரும் பணத்தை துாக்கி வீசுங்கள் ரிஷிவந்தியத்தில் பிரேமலதா ஆவேசம்
/
தி.மு.க.,வினர் தரும் பணத்தை துாக்கி வீசுங்கள் ரிஷிவந்தியத்தில் பிரேமலதா ஆவேசம்
தி.மு.க.,வினர் தரும் பணத்தை துாக்கி வீசுங்கள் ரிஷிவந்தியத்தில் பிரேமலதா ஆவேசம்
தி.மு.க.,வினர் தரும் பணத்தை துாக்கி வீசுங்கள் ரிஷிவந்தியத்தில் பிரேமலதா ஆவேசம்
ADDED : ஏப் 01, 2024 04:24 AM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் விஜயகாந்த் ஆன்மா இருப்பதாக, பிரேமலதா பேசினார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் அருகே வாணாபுரத்தில், அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது:
ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த விஜயகாந்த் அனைத்து கிராமங்களுக்கும் சென்று, மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். இது விஜயகாந்த் வாழ்ந்த பூமி. தி.மு.க.,வினர் கொடுக்கும் பணத்தை அவர்களது முகத்தில் துாக்கி வீசுங்கள்.
இன்றைக்கு (31ம் தேதி) ஈஸ்டர் பண்டிகை. ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த நாள். அதுபோல முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய மூன்று தெய்வங்களும் உயிர்த்தெழுந்து இந்த கூட்டணியை ஆசிர்வதிப்பார்கள். மூன்று பேரும் மனிதர்களாக பிறந்து, தெய்வமாக இருந்து நமது கூட்டணியை வழிநடத்துவர்.
உங்களை எல்லாம் காப்பாற்றுவதற்காக தான் விஜயகாந்த் என்னை உங்களிடம் விட்டுச் சென்றுள்ளார். என்னுடைய வாழ்க்கையை தமிழக மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் வர வேண்டுமோ அதை குமரகுரு ரூபத்தில் விஜயகாந்த் செய்வார்.
அ.தி.மு.க., 4 எழுத்து, தே.மு.தி.க. 4 எழுத்து, எஸ்.டி.பி.ஐ. 4 எழுத்து. அதேபோல இந்த கூட்டணியிலும் 4 கட்சிகள் இணைந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வரப்போவதும் ஜுன் 4ம் தேதி. ரிஷிவந்தியம் தொகுதியில் மக்கள் வரிப்பணத்தில் விஜயகாந்த் கட்டிய பஸ் நிலையத்தை இடிக்கும் உரிமையை தி.மு.க.,விற்கு யார் கொடுத்தது. அன்று விஜயகாந்த் கட்டிய திருமண மண்டபத்தை இடித்தார்கள். தேர்தல் முடிந்ததும் பஸ் நிலையம் இடித்ததை கண்டித்து அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., சார்பில் ரிஷிவந்தியம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
முன்னாள் முதல்வர் ஜெ., கொண்டு வந்த தாலிக்கு தங்கம் உட்பட பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு, கஞ்சா விற்பனை, ரவுடிசம், சட்டம், ஒழுங்கு பிரச்னை, பாலியல் துன்புறுத்தல் என மக்களை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க., உள்ளது.
இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றால் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆன்மா சாந்தியடையும் என, கண்ணீர் மல்க பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

