ADDED : ஜூலை 01, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் புதுச்சேரி விஷன் சார்பில், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் கவுரவிக்கபட்டனர்.
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த டாக்டர்கள் தின விழாவை, கல்லுாரி இயக்குனர் உதயகுமார் துவக்கி வைத்து பேசினார். அதைத் தொடர்ந்து துணை மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேஷ் தாஸ், டீன் ராமச்சந்திரன் பட் ஆகியோர் டாக்டர்கள் சேவைகள் குறித்து விளக்கினர்.
மருத்துவமனை டாக்டர்களை உதவி ஆளுநர் தேவிகா, தலைவர் ரூபா லாரன்ஸ் ஆகியோர் கவுரவித்தனர். செயலாளர் தமிழ்ச்செல்வி, பொருளாளர் இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
