/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணம், அச்சுறுத்தல்களுக்கு பணியாமல் அனைவரும் ஓட்டுப் போடுங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

ADDED : ஏப் 06, 2024 05:21 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் பணம், அச்சுறுத்தல்களுக்கு பணியாமல் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வாக்காளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் கடிதம்:
வாக்காளர்களாகிய உங்களது ஓட்டுகள் மிகுந்த மதிப்பு வாய்ந்தவை. ஓட்டுகள் விற்பனைக்கு அல்ல. அதுபோல், ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம். ஊழல் நடைமுறைகள் அல்லது தேர்தல் குற்றங்களான ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்துதல், வாக்காளர்களை மிரட்டுதல், அதிகார ஆளுமை செய்தல் போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத மற்றும் தேவையற்ற துாண்டுதல் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாகும். ஓட்டுக்குப் பணம் வாங்குவது, தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் ஏதேனும் நடந்தால், வாக்காளர்கள் தேர்தல் துறைக்கு புகார்களைப் பதிவு செய்ய வேண்டும். புகாரின் ரகசியத்தன்மை காக்கப்படும்.
கட்டணமில்லா தொலைபேசி எண்-1950க்கு அழைத்துப் புகார் அளிக்கலாம். இல்லையெனில் சி.விஜில் செயலியைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம். பண பலத்தை கட்டுப்படுத்த 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் பறக்கும் படைகள் பணியில் உள்ளன. பெறப்படும் புகார்கள் மீது விரைவாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்கப்படும். புகாரளிக்க செய்யப்பட்டுள்ள இந்த வசதியினை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
பணம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பணியாமல் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். மற்றவர்களையும் ஓட்டளிக்க ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.