sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டாக்டரிடம் ரூ. 2 லட்சம் மோசடி: சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

/

டாக்டரிடம் ரூ. 2 லட்சம் மோசடி: சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

டாக்டரிடம் ரூ. 2 லட்சம் மோசடி: சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

டாக்டரிடம் ரூ. 2 லட்சம் மோசடி: சைபர் கிரைம் கும்பல் கைவரிசை


ADDED : மே 01, 2024 01:44 AM

Google News

ADDED : மே 01, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : தனியார் மருத்துவரிடம் ரூ. 2 லட்சம் ஏமாற்றிய மோசடி நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, நைனார்மண்டபத்தைச் சேர்ந்தவர் சூர்யகுமார், 31; மணக்குள விநாயகர் மருத்துவமனை மருத்துவர். இவருடைய மொபைல் போனுக்கு நேற்று அழைப்பு ஒன்று வந்தது.

எதிர் முனையில் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் என, அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக ரூ. 2 கோடி வந்துள்ளதாக தெரிவித்தார். உங்கள் வங்கி கணக்கை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அச்சமடைந்த சூர்யகுமார், மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 2 லட்சம் அனுப்பி ஏமாந்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us