/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் சீரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
வாய்க்கால் சீரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாய்க்கால் சீரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாய்க்கால் சீரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 31, 2024 04:16 AM

திருபுவனை : செல்லிப்பட்டு மற்றும் வினாயகம்பட்டு கிராமத்தில் பழுதடைந்த 'ப' வடிவ வாய்க்கால் சீரமைப்பு பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு மற்றும் வினாயகம்பட்டு கிராமத்தில் ரூ.29.39 லட்சம் செலவில் பழுதடைந்த 'ப' வடிவ வாய்க்கால் சீரமைப்பு பணி நேற்று துவங்கியது.தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியைதுவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற் பொறியாளர் சுந்தரராஜ், உதவிப் பொறியாளர்சீனுவாசராம், இளநிலைப்பொறியாளர் தமிழரசன், ஒப்பந்ததாரர் எழிலன் மற்றும் கிராமமுக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.