/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம்
/
திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஏப் 23, 2024 04:03 AM

திருக்கனுார் : கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
நேற்று மதியம் 12:00 மணியளவில் திரவுபதியம்மன்- அர்ஜூனன் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு முத்துபல்லக்கில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, நாளை (24ம் தேதி) காலை தேர் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 25ம் தேதி காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.

