/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுதும் எதிரொலிக்கிறது': காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேச்சு
/
'திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுதும் எதிரொலிக்கிறது': காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேச்சு
'திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுதும் எதிரொலிக்கிறது': காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேச்சு
'திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுதும் எதிரொலிக்கிறது': காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேச்சு
ADDED : ஏப் 08, 2024 05:20 AM
புதுச்சேரி: ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுதும் எதிரொலிக்கிறது என, காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேசினார்.
புதுச்சேரியில், தி.மு.க., சார்பில், நடந்த பிரசார கூட்டத்தில் அவர், பேசியதாவது;தமிழக முதல்வர் ஸ்டாலினை பார்க்கும்போது, கருணாநிதி தான் நினைவுக்கு வருகிறார். கருணாநிதி புதுச்சேரி மீது அதிக பாசம் கொண்டவர். தமிழ்நாட்டில் சில ஆண்டுகள் பதவிகள் இல்லாமல் இருந்த காலத்தில், புதுச்சேரி தான் அவருக்கு ஆறுதல் தந்த இடம்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவை நாடே எதிர்த்தபோது, கருணாநிதி நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என கூறிய முழக்கம், நாடு முழுதும் எதிரொலித்தது. இந்திராவை மக்கள் செல்வாக்கு பெற்று ஆட்சி பீடத்தில் அமர செய்தது. அப்பேற்பட்ட தீர்க்கதரிசி கருணாநிதி. அவரது உருவாகத்தான் ஸ்டாலினை பார்க்கிறேன்.
கடந்த 2019 தேர்தலில் காங்., கூட அறிக்கவில்லை. ஆனால், ஸ்டாலின் நாட்டிற்கு ராகுல் தான் வருங்கால பிரதமர் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு தான் ராகுலை நாடே போற்றும் தலைவராக உயர்த்தி இருக்கிறது. அந்த அறிவிப்பில் இருந்து ஸ்டாலின் இன்னும் பின்வாங்கவில்லை.
அந்த அறிவிப்பு செயல்வடிவம் பெறுவதற்கான பணியாக, இண்டியா கூட்டணியை ஸ்டாலின் முன் முயற்சியால் உருவாக்கி இன்று ஆட்சியை பிடிக்கும் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுதும் எதிரொலிக்கிறது. சமூக நீதியை குறிக்கோளாக வைத்து பெண்களை முன்னிறுத்தும் திட்டங்களை நாடே திரும்பி பார்க்கிறது.
ஸ்டாலினும், ராகுலும் இணைந்து இந்தியாவை காக்க புறப்பட்டு உள்ளனர். அதன் வெற்றிதான் இன்றைய தேர்தல் வெற்றி' என்றார்.

