/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெட்டியார்பாளையத்தில் குடிநீர் 'கட்'
/
ரெட்டியார்பாளையத்தில் குடிநீர் 'கட்'
ADDED : மே 28, 2024 03:52 AM
புதுச்சேரி, : ரெட்டியார்பாளையம் பகுதியில் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எம்.ஜி.ஆர்., நகர் நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை( 29ம் தேதி) மற்றும் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள், மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, மூலக்குளம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், தஷ்ணாமூர்த்தி நகர், பாலாஜி நகர், அண்ணாவீதி.
ஜெயா நகர், ரெட்டியார்பாளையம், புதுநகர், வழுதாவூர் ரோடு (தெற்கு), சண்முகாபுரம், சீனிவாசபுரம், ரங்கா நகர், சிவசக்தி நகர், சக்தி நகர், மோதிலால் நகர், குண்டுசாலை, உழவர்கரை, பசும்பொன் நகர் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.